சாந்திகிராமா அருகே, டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டது; 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி


சாந்திகிராமா அருகே, டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டது; 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 3 April 2017 1:08 AM IST (Updated: 3 April 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

சாந்திகிராமா அருகே, டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது.

ஹாசன்,

சாந்திகிராமா அருகே, டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார் சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நேர்ந்துள்ளது.

தாறுமாறாக ஓடிய கார்

ஹாசன் டவுனைச் சேர்ந்தவர் புஷ்பராஜ்(வயது 54). இவர் நேற்று தனது குடும்பத்தினர் மாலதி(35), ராஜேஸ்வரி(45) ஆகியோருடன் காரில் சாந்திராமா பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்றார். அங்கு கோவிலில் பூஜை செய்து சாமி தரிசனம் செய்த அவர்கள், பின்னர் அங்கிருந்து ஹாசனுக்கு காரில் புறப்பட்டனர். காரை புஷ்பராஜ் ஓட்டினார்.

அவர்கள், சாந்திராமா அருகே ரங்கநாதபுரா கேட் பகுதியில் வந்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையில் உருண்டு விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்து போனது.

3 பேர் பலி

காரில் இருந்த புஷ்பராஜ், மாலதி, ராஜேஸ்வரி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து சாந்திகிராமா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் புஷ்பராஜ் உள்பட 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு திரும்பியபோது கார் உருண்டு விபத்துக்குள்ளானத்தில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story