பேராவூரணி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்


பேராவூரணி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 April 2017 2:16 AM IST (Updated: 3 April 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி அருகே மதுக்கடையை மூடக்கோரி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேராவூரணி,

நெடுஞ்சாலை அருகே உள்ள மதுக்கடையை மூட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதில் பேராவூரணியில் இருந்த மதுக்கடையும் மூடப்பட்டது. இதனால் பேராவூரணி அருகே கொன்றைக்காடு கிராமத்தில் உள்ள மதுக்கடையில் கூட்டம் அதிகரித்தது. இது அப்பகுதி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியதை அடுத்து, கொன்றைக்காட்டில் இயங்கி வரும் மதுக்கடையை மூட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மதுக்கடையை மூடக்கோரி கொன்றைக்காடு கிராமத்தை சேர்ந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பந்தப்பட்ட மதுக்கடையை கிராம விடியல் சுயஉதவி குழுவைச் சேர்ந்த சாந்தி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பேராவூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மதுக்கடை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story