46 ஆயிரத்து 877 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது
பெரம்பலூர் மாவட்டத்தில் 46 ஆயிரத்து 877 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் ஆக மொத்தம் 384 மையங்களில் முதல்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் நேற்று நடந்தது. இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஓட்டல்கள், நடமாடும் வாகனங்கள் உள்ளிட்டவற்றிலும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
பெரம்பலூர் சங்குப்பேட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சம்பத் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
46 ஆயிரத்து 877 குழந்தைகள்
பெரம்பலூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வ தொண்டர்கள் என மொத்தம் 1,528 பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 46 ஆயிரத்து 877 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது. 2-வது கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் பெற்றோர்கள் தவறாது தங்களது 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க செய்து, இளம்பிள்ளை வாதநோயில் இருந்து தங்களது குழந்தைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க தலைவர் அம்பிகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் ஜெயராமன், கார்த்திக், அரசு மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் வெங்கடேசன், தேசிய சுகாதார இயக்க உதவி திட்ட மேலாளர் தினேஷ், வட்டார மருத்துவர் டாக்டர் விஜய் ஆனந்த், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அனிதா மற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், ரோட்டரி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story