தூத்துக்குடியில் மதுக்கடையில் அலைமோதிய கூட்டம்


தூத்துக்குடியில் மதுக்கடையில் அலைமோதிய கூட்டம்
x
தினத்தந்தி 3 April 2017 4:30 AM IST (Updated: 3 April 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் மதுக்கடையில் கூட்டம் அலைமோதியது.

தூத்துக்குடி,

நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ள மதுக்கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள 84 மதுக்கடைகள் அகற்றப்பட்டு உள்ளன. இதனால் மாவட்டம் முழுவதும் 61 மதுக்கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

மதுப்பிரியர்கள் மதுக்கடைகளை தேடி அலைந்து வருகின்றனர். குறைந்த அளவு கடைகளே இருப்பதால் மது வாங்குவதற்காக காலை முதலே மதுப்பிரியர்கள் கூட்டம் அலை மோதுகிறது.

போலீஸ் பாதுகாப்பு

நேற்று காலையில் தூத்துக்குடி பிரையண்ட்நகர் பகுதியில் உள்ள மதுக்கடையில் மதுபானங்கள் வாங்குவதற்காக ரோட்டில் காத்து நின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கடை திறந்தவுடன் முண்டியடித்து சென்று மதுபாட்டில்களை வாங்க முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மதுபானங்கள் விற்பனை நடந்தது. அப்போது பலர் அதிக அளவில் மதுபானங்களை வாங்கி சென்றனர். மதியத்துக்கு பிறகு கூட்டம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது.


Next Story