போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
கோவில்பட்டியில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி,
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடந்தது. கோவில்பட்டி நகராட்சி சார்பில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக 30 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அந்த முகாம்களில் நேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
10 ஆயிரம்
நிகழ்ச்சியில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா, நகராட்சி தனி அதிகாரி முருகேசன், தாசில்தார் ஜான்சன் தேவசகாயம், கோவில்பட்டி மருத்துவத்துறை இணை இயக்குனர் பாலு, துணை இயக்குனர் போஸ்கோ ராஜா, அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவர் கமலவாசன், இணை மருத்துவர் பூவேசுவரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோவில்பட்டியில் நேற்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு உள்ளது.

Next Story