டிரைவர் பின்னோக்கி எடுத்ததால் லாரிக்கு அடியில் படுத்து தூங்கியவர் உடல் நசுங்கி சாவு
டிரைவர் பின்னோக்கி எடுத்ததால் லாரிக்கு அடியில் படுத்து தூங்கியவர் உடல் நசுங்கி சாவு
திருவொற்றியூர்,
மணலி காமராஜர் சாலை சுடுகாடு எதிரே காலி இடம் உள்ளது. திண்டிவனத்தை சேர்ந்த லாரி டிரைவர் மகேஷ்குமார் (வயது 30) தான் ஓட்டி வந்த டிப்பர் லாரியை அங்கு நிறுத்தி வைத்து இருந்தார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ஒருவர், குடிபோதையில் லாரியின் பின்புறம் தரையில் படுத்து இருந்தார்.
இதை கவனிக்காத டிரைவர் மகேஷ்குமார், லாரியை பின்னோக்கி எடுத்தார். இதில் லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய அந்த நபர் மீது லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். ஆனால் அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.
இதுபற்றி வழக்குப்பதிவு செய்த மணலி போலீசார், லாரி டிரைவர் மகேஷ்குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story