எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த கணவன்–மனைவி கைது


எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த கணவன்–மனைவி கைது
x
தினத்தந்தி 3 April 2017 4:00 AM IST (Updated: 3 April 2017 2:23 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்த கணவன்–மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் சுனாமி குடியிருப்பு, 21–வது பிளாக்கில் வசித்து வருபவர் சாம்சன் (வயது 32). இவருடைய மனைவி காமாட்சி(32). இவர்கள் இருவரும் சேர்ந்து தங்களது வீட்டின் முன்பு உள்ள காலி இடத்தில் கீரை செடிகளுக்கு இடையில் கஞ்சா செடிகளை வளர்த்து வருவதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் சாம்சன் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது உண்மை என தெரிய வந்தது.

கணவன்–மனைவி கைது

இதையடுத்து சாம்சன் மற்றும் அவருடைய மனைவி காமாட்சி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களது வீட்டில் வளர்த்து வந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைதான சாம்சன் மீது மீன்பிடி துறைமுகம் மற்றும் தண்டையார்பேட்டை போலீஸ் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது தெரிய வந்தது. பின்னர் கைதான கணவன்–மனைவி இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story