இந்திய மேலாண்மை கழகத்தில் புதிய இயக்குனர் பதவி ஏற்பு


இந்திய மேலாண்மை கழகத்தில் புதிய இயக்குனர் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 5 April 2017 10:30 PM GMT (Updated: 2017-04-06T02:28:18+05:30)

இந்திய மேலாண்மை கழகத்தில் புதிய இயக்குனர் பதவி ஏற்பு

திருச்சி,

திருச்சியில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தின் (ஐ.ஐ.எம்) இயக்குனராக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த பிரபுல்ல அக்னிஹோத்ரி மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து திருச்சி ஐ.ஐ.எம். மின் புதிய இயக்குனராக மராட்டிய மாநிலத்தை சேர்ந்த முனைவர் பீமாராய மெட்ரி நேற்று பதவி ஏற்றார். இந்திய மேலாண்மை கல்வியில் சுமார் 25 ஆண்டுகள் அனுபவம் உள்ள மெட்ரி, பிட்ஸ் பிலானி, குர்கான் ஐ.எம்.ஐ. உள்ளிட்ட பல்வேறு உயர் கல்வி மேலாண்மை நிறுவனங்களில் பேராசிரியர் ஆக பணியாற்றி உள்ளார். உயர் கல்வி தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Next Story