அரூரில் வசாய சங்கங்களில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


அரூரில் வசாய சங்கங்களில் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-06T19:12:40+05:30)

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து

அரூர்,

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரூரில் விவசாய சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில கரும்பு விவசாய சங்க பொருளாளர் கருப்பண்ணன் தலைமை தாங்கினார். உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன தலைவர் சண்முகம், நிர்வாகிகள் ராமலிங்கம், அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு போராட்ட குழுவினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Next Story