மல்லப்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்


மல்லப்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா ஆடு, கோழிகள் பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 2017-04-06T19:16:07+05:30)

மல்லப்பாடியில் மாரியம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

பர்கூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா மல்லப்பாடி கிராமத்தில் 3 மாரியம்மன் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சாமிக்கு சாமிக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்யப்பட்டது.

நேற்று முன்தினம் மாரியம்மன் ஊர்வலமும், மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. மாலை இன்னிசை கச்சேரியும், இரவு வாண வேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது. இதையொட்டி 3 மாரியம்மன் கோவில்களில் இருந்து பக்தர்கள் பூங்கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் பெண்கள் பங்கேற்ற மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாரியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேர்த்திக்கடன்

விழாவை முன்னிட்டு பர்கூர், மல்லப்பாடி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மக்கள், 500–க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். மேலும் விருந்து சமைத்து, உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் வழங்கினார்கள். விழாவின் தொடர்ச்சியாக நேற்று பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story