சேடபட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் 10 பேர் காயம்


சேடபட்டி அருகே  பாப்பிநாயக்கன்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு மாடு முட்டியதில் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 6 April 2017 11:00 PM GMT (Updated: 6 April 2017 6:43 PM GMT)

சேடபட்டி அருகே பாப்பிநாயக்கன்பட்டி காளியம்மன்கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

உசிலம்பட்டி,

பேரையூர் தாலுகா, சேடபட்டி ஊராட்சி ஒன்றியம், எஸ்.பாப்பிநாயக்கன்பட்டியில் ஸ்ரீகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டிற்கு மதுரை, திருச்சி, கோவை, பரவை, அலங்காநல்லூர், பாலமேடு, உள்ளிட்ட பல ஊர்களிலிருந்து 163 காளைகள் கலந்து கொண்டன. இதேபோல் மாடு பிடி வீரர்கள் 262 பேர் கலந்து கொண்டனர்.

காலை 8 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மதியம் 1 மணிக்கு நிறைவடைந்தது. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் ஆட்டுக்குட்டிகள், தங்க நாணயம், வாஷிங் மிஷின், கட்டில், சைக்கிள், மொபட் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

10 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டு விழாவில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சுகன்யா, தாசில்தார் சிவகுமார் கலந்து கொண்டனர். போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் குருவெங்கட் ராஜ், விநாயகம் உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் மாடுகள் முட்டியதில் வீரர்கள் 10 பேர்கள் காயம் அடைந்தனர்.


Next Story