ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு தங்க குடம் காணிக்கை


ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு தங்க குடம் காணிக்கை
x
தினத்தந்தி 6 April 2017 10:30 PM GMT (Updated: 6 April 2017 8:51 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு தங்க குடம் காணிக்கை

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரத்தை அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் அவதரித்தவர் எம்பார். ராமானுஜருக்கு சகோதர முறை உறவினரான இவர் ராமானுஜருக்கு உறுதுணையாக இருந்து அவரை எதிரிகளின் சூழ்ச்சிகளில் இருந்து காப்பாற்றியவராக கூறப்படுகிறது. ராமானுஜரால் எம்பெருமானார் என பெயரிடப்பட்ட சிறப்புக்குரியவர். ராமானுஜரின் ஆயிரமாவது அவதார விழாவை முன்னிட்டு எம்பார் கைங்கர்ய டிரஸ்ட் சார்பில் ரூ.77 லட்சம் மதிப்புள்ள தங்க குடம் காணிக்கையாக வழங்க முடிவு செய்யப்பட்டது. அதையொட்டி மதுரமங்கலத்தில் இருந்து எம்பார் புறப்பாடு நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலை வந்தடைந்த எம்பாருக்கும், ராமானுஜருக்கும் திருமஞ்சனம் நடந்தது. ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட தங்க குடம் ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கப்பட்டது.

இதில் நிர்வாக அதிகாரிகள் வேதமூர்த்தி, வடிவேல்துரை மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

Next Story