குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 21 மின்மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 21 மின்மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 6 April 2017 8:51 PM GMT)

குடிநீர் குழாயில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்தப்பட்ட 21 மின்மோட்டார்கள் பறிமுதல்

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகர பகுதியில் குடிநீர் குழாய்களில் இருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதாக மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமார் வழிகாட்டுதலில் நகராட்சி பணியாளர்கள் ஜெயங்கொண்டம் வேலாயுதநகர், பொன்நகர், பகுத்தறிவுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 21 வீடுகளில் குடிநீர் குழாய்களில் இருந்து மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சியது தெரியவந்தது. இதையடுத்து அந்த 21 மின்மோட்டார்களை நகராட்சி பணியாளர்கள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த மின்மோட்டார்களை நகராட்சி ஆணையரிடம் ஒப்படைத்தனர். நகரில் இதுபோன்ற சோதனை தொடரும் என்றும், குடிநீர் குழாய்களில் மின்மோட்டாரை பயன் படுத்தி தண்ணீரை உறிஞ்சினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார். 

Next Story