நடைபாதை வியாபாரிகளிடம் லஞ்சம்: 3 போலீஸ்காரர்கள் இடைநீக்கம்


நடைபாதை வியாபாரிகளிடம் லஞ்சம்: 3 போலீஸ்காரர்கள் இடைநீக்கம்
x
தினத்தந்தி 6 April 2017 8:52 PM GMT (Updated: 2017-04-07T02:22:21+05:30)

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் நடைபாதை வியாபாரிகளை மிரட்டி 3 போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரவியது.

மும்பை,

மும்பை சாக்கிநாக்கா பகுதியில் நடைபாதை வியாபாரிகளை மிரட்டி 3 போலீஸ்காரர்கள் லஞ்சம் வாங்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளத்தில் பரவியது. 50 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் போலீஸ்காரர்கள் 3 பேரும் நடைபாதை வியாபாரிகள், பீர் பார் உரிமையாளர் மற்றும் வாகன பார்கிங் நடத்துபவர்களிடம் லஞ்சம் வாங்கும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

இதையடுத்து லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் லஞ்சம் வாங்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து துணை போலீஸ் கமி‌ஷனர் விநாயக் தேஷ்முக் கூறும்போது, ‘வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிய 3 போலீஸ்காரர்களை இடைநீக்கம் செய்துள்ளோம். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார்.


Next Story