தலைமை தபால் நிலையம் முன்பு கலப்பைக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்


தலைமை தபால் நிலையம் முன்பு கலப்பைக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 6 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-07T02:35:35+05:30)

தலைமை தபால் நிலையம் முன்பு கலப்பைக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

புதுச்சேரி,

புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்கள் கலப்பைக்கு மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிகளில் விவசாயிகள் வாங்கி உள்ள பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாய தொழிலை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

மேலும் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை விமர்சித்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜாவின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உருவ பொம்மையை எரிக்கவிடாமல் தடுத்தனர். இதனால் ஆர்ப்பாட்டக்காரர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை பெரியகடை போலீசார் கைது செய்தனர். 

Next Story