விநோதம்


விநோதம்
x
தினத்தந்தி 7 April 2017 9:59 AM GMT (Updated: 2017-04-07T15:28:50+05:30)

தன்னுடைய மனைவியை ஏலம் விடுவதாக அறிவித்து, லண்டன் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார். இந்த ஏலத்திற்கு ஏராளமான செல்வந்தர்கள் வந்துசேர்ந்தனர்.

வரலாற்றில் இன்று..!

185 வருடத்திற்கு முன்பாக இன்றைய தேதியில் (7–4–1832), லண்டனின் பிரபல பத்திரிகையில் வெளியான செய்தியை இங்கே தூசி தட்டி எடுத்திருக்கிறோம்! அன்றைய தினத்தில் வாழ்ந்த ஜோசப் தாம்சன், மேரி ஆன் என்பவரை திருமணம் முடித்திருக்கிறார். இவர்களின் திருமண வாழ்வு, 3 வருடம் கூட தாக்குப்பிடிக்கவில்லை. இதனால் ஜோசப் என்ன முடிவெடுத்தார் தெரியுமா? தன்னுடைய மனைவியை ஏலம் விடுவதாக அறிவித்து, லண்டன் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டார். இந்த ஏலத்திற்கு ஏராளமான செல்வந்தர்கள் வந்துசேர்ந்தனர். இறுதியில் மேரி ஆனை, ஹென்றி மியர்ஸ் என்பவர் நல்ல விலைக்கு வாங்கிக் கொண்டாராம். இந்தச் செய்தியை, அங்குள்ள பிரபல பத்திரிகை அன்றைய தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளது.

எல்லாமே வியாபாரம்தான்..

டைட்டானிக் கப்பல் மூழ்கிய இடத்தில், மிதக்கும் ஓட்டலை உருவாக்கி இருக்கிறார்கள். இங்கு சுவையான உணவு பரிமாறப்படுவதுடன், ஆழ்கடலில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை பிரத்யேக ஏற்பாட்டில் கண்டுகளிக்கலாம். இதற்கான வேலைகள் இன்னும் இறுதி கட்டத்தை எட்டாத நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தங்களது முன்பதிவு வேலைகளை தொடங்கிவிட்டனர்.

Next Story