திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு


திருமணம் செய்து கொள்வதாக கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 7 April 2017 6:40 PM GMT (Updated: 2017-04-08T00:10:17+05:30)

நாகை மாவட்டம், சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவரத்தினம் (வயது 25).

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி அருகே வழுதலைக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கோவரத்தினம் (வயது 25). இவர், அதே பகுதியை சேர்ந்த 17 வயதான கல்லூரி மாணவியுடன் பழகி வந்துள்ளார். அப்போது திருமண செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியுடன் கோவரத்தினம் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த மாணவி கர்ப்பமானார். இதுகுறித்து கோவரத்தினத்திடம் கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை கேட்டுள்ளார். அதற்கு கோவரத்தினம் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து மாணவியின் பெற்றோர், கோவரத்தினத்தின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோரிடம் உங்களது மகன் எனது மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாகவும், அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கும்படியும் கேட்டுள்ளனர். அதற்கு கோவரத்தினத்தின் பெற்றோர், அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சீர்காழி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய கோவரத்தினத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story