விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு: சாஸ்திரி பவன் முற்றுகை போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கைது
சென்னை,
டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரிபவன் அருகே போராட்டம் நடந்தது. போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, சாஸ்திரிபவனை முற்றுகையிட்டனர்.
இதனையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
முன்னதாக முற்றுகை போராட்டத்துக்கு தலைமை தாங்கிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரன் நிருபர்களிடம் கூறுகையில், “டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அவர்களுடன் உடனடியாக மோடி அரசு பேச்சுவார்த்தை நடத்தி விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும். அதேபோல மக்கள் விரோத திட்டமான ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும். இதை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்”, என்றார்.

Next Story