சின்னப்புத்தூர்–வேலூர் வழித்தடத்தில் புதிய பஸ் வசதி அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
கண்ணமங்கலம் அருகேயுள்ள சின்னப்புத்தூரில் இருந்து வேலூருக்கு புதிய நகர பஸ் இயக்க தொடக்க விழா நடந்தது.
கண்ணமங்கலம் அருகேயுள்ள சின்னப்புத்தூரில் இருந்து வேலூருக்கு புதிய நகர பஸ் இயக்க தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு தூசி மோகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் சங்கர், கோவிந்தராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெமினி ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சங்கர் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு சின்னப்புத்தூர்–வேலூர் புதிய வழித்தடத்தில் பஸ்சை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழாவில் ஒன்றிய முன்னாள் கவுன்சிலர்கள் திருமால், ரவி, சுரேஷ், போக்குவரத்து கழக பொதுமேலாளர் ரமேஷ், உதவி பொதுமேலாளர் தசரதன், கொணவட்டம் கிளை மேலாளர் மோகன், ஆரணி தாசில்தார் தமிழ்மணி, மாவட்ட பாசறை செயலாளர் கஜேந்திரன், இளைஞர் பாசறை பாபு, பால் கூட்டுறவு சங்க தலைவர் குப்புசாமி, 5 புத்தூர் கிளை அ.தி.மு.க. நிர்வாகிகள் சுரேஷ், சுந்தரேசன், முனிசாமி சிதம்பரம் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.