அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை பக்தர்கள் கிரிவலம் சென்றனர்


அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜை பக்தர்கள் கிரிவலம் சென்றனர்
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 14 April 2017 9:14 PM IST)
t-max-icont-min-icon

தமிழ் புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

திருவண்ணாமலை,

தமிழ்புத்தாண்டையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

தமிழ் புத்தாண்டையொட்டி மூலவருக்கு தங்க கவசமும், சம்பந்த விநாயகருக்கு வெள்ளி கவசமும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கப்படி பால் பெருக்கு நிகழ்ச்சியும், 3–ம் பிரகாரத்தில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதி முன்பு நடப்பு தமிழ் ஆண்டுக்கான (ஹேவிளம்பி) பஞ்சாங்கம் வாசித்ததல் நிகழ்ச்சியும் நடந்தது. கோவில் சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கத்தை வாசித்து, இந்த ஆண்டுக்கான அருணாசலேஸ்வரர் கோவில் விழா நிகழ்ச்சிகளை அறிவித்தனர்.

கிரிவலம்

தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்களின் தரிசனத்துக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அமர்வு தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். நவக்கிரக சன்னதியில் நெய்தீபம் ஏற்றியும் வழிபட்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று காலையில் திரளான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


Next Story