தர்மபுரி விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு


தர்மபுரி விநாயகர் கோவில்களில்  சங்கடஹர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 14 April 2017 10:45 PM GMT (Updated: 2017-04-14T22:18:23+05:30)

தர்மபுரியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தர்மபுரி,

தர்மபுரியில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சங்கடஹர சதுர்த்தியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அந்தந்த கோவில்களில் நடைபெற்ற இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி சாலை விநாயகர் கோவிலில் நடைபெற்ற சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாட்டில் சாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதே போல் தர்மபுரி குமாசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் மற்றும் செல்வகணபதி கோவில், நெசவாளர் நகர் விநாயகர் கோவில், அன்னசாகரம் விநாயகர் கோவில் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.


Next Story