தர்மபுரியில் தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி


தர்மபுரியில்  தீயணைப்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 14 April 2017 10:19 PM IST)
t-max-icont-min-icon

தீயணைப்பு பணியின் போது உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தர்மபுரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நேற்று நடந்தது.

தர்மபுரி,

1944–ம் ஆண்டு ஏப்ரல் 14–ந்தேதி மும்பை துறைமுகத்தில் வெடி பொருட்கள் ஏற்றப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. கப்பலுக்குள் இருந்த பலர் உயிரிழந்தனர். கப்பலில் பிடித்த தீயை அணைக்கும் பணிக்கு சென்ற தீயணைப்பு துறையை சேர்ந்த 66 பேர் அந்த விபத்தில் தீயில் சிக்கி வீரமரணம் அடைந்தனர். அந்த சம்பவத்தில் உயிர் நீத்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்தியா முழுவதும் தீயணைப்பு தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. உயிரிழந்த தீயணைப்பு படைவீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 14–ந்தேதி அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இதன்படி தர்மபுரி தீயணைப்பு துறை அலுவலக வளாகத்தில் நேற்று அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் கலந்து கொண்டு நினைவு ஸ்தூபிக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து நிலைய அலுவலர் மணிவண்ணன், ஏட்டு ராஜா மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பென்னாகரம்–அரூர்

இதே போன்று பென்னாகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு துறையினர் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஒகேனக்கல்லில் நிலைய அலுவலர் ஜானகிராமன் தலைமையிலும், பாலக்கோட்டில் நிலைய அலுவலர் ராஜதுரை தலைமையிலும், அரூரில் நிலைய அலுவலர் வேலு தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story