ஒன்னல்வாடியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்


ஒன்னல்வாடியில் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:15 AM IST (Updated: 14 April 2017 10:27 PM IST)
t-max-icont-min-icon

ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் புதிய மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு கிராமத்தில் மதுக்கடை இயங்கி வந்தது. அந்த மதுக்கடை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மூடப்பட்டது. இந்த நிலையில் சானமாவு கிராமத்தில் இயங்கி வந்த மதுக்கடையை அருகில் உள்ள ஒன்னல்வாடி கிராமத்தில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதற்காக ஒன்னல்வாடியில் இருந்து ஜொனபண்டா செல்லும் சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கடை கட்டுவதற்கான கட்டுமான பணிகள் தொடங்கியது.

போராட்டம்

இந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்னல்வாடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடசாமி தலைமையில் நேற்று புதிதாக மதுக்கடை கட்டும் இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஒன்னல்வாடியில் மதுக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினார்கள். சிறிது நேரம் அவர்கள் அங்கு நின்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story