பாலமேட்டை மையமாக கொண்டு வைக்கோல் கூடம் அமைக்க வேண்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கோரிக்கை
வாடிப்பட்டியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில்
வாடிப்பட்டி,
வாடிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். மண்டலதுணைதாசில்தார் மணிமேகலை, துணைதாசில்தார் கமலேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயசங்கதலைவர் சீத்தாராமன் நாராயணசாமி வரவேற்றார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் மனுக்கள் கொடுத்தனர். மனுவில் கூறப்பட்டிருந்த விவரம் வருமாறு:– வாடிப்பட்டி பகுதி விவசாயிகளுக்கு பயிர்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கவேண்டும். பாலமேட்டில் கால்நடைகள் அதிகம் வளர்க்கப்பட்டு வருவதால் பாலமேட்டை மையமாக கொண்டு வைக்கோல் கூடம் அமைக்கவேண்டும்.
விவசாயிகள் போராட்டம்வாடிப்பட்டி செம்மினிப்பட்டி சாலையில் செட்டிகுளம் முன்புள்ள பாலத்தை சீரமைக்கவேண்டும். அலங்காநல்லூர் ஊராட்சி அலுவலகம் அருகில் உள்ள செருவன்கண்மாயிக்கு தண்ணீர்வரத்து கால்வாயை சீரமைத்து தூர்வாரவேண்டும். அய்யங்கோட்டை கண்மாயில் 3 இடங்களில் பழுதான மதகுகளையும் மடைகளையும் சீரமைக்கவேண்டும். வாடிப்பட்டியிலிருந்து குட்லாடம்பட்டி கொட்டமடைக்கி கண்மாய் செல்லும் சாலையில் 36 அடி உயர சிவலிங்க அண்ணாமலையார் கோவில் உள்ளதால் அந்த பகுதியில் புதிதாக மதுபானக்கடையை அமைக்கக்கூடாது. அதே போல குட்லாடம்பட்டி சாலையிலும் புதிதாக மதுபானக்கடையை அமைக்கக்கூடாது. மதுபானக்கடைக்கு எதிர்ப்பாக விவசாயிகள் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் விவசாயி ராஜேந்திரன் நன்றி கூறினார்.