தருண் விஜய் எம்.பி.யை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தருண் விஜய் எம்.பி.யை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 12:52 AM IST)
t-max-icont-min-icon

தருண் விஜய் எம்.பி.யை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவை

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் எம்.பி. தருண் விஜய் தென்னிந்தியர்களை கருப்பர்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து திராவிடர் கழகம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சிற்றரசு தலைமை தாங்கினார். இளைஞர் அணி மாவட்ட தலைவர் சந்திரசேகர், மகளிர் அணி மாவட்ட தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.பி. தருண் விஜயை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story