திருவாரூரில் டாஸ்மாக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


திருவாரூரில் டாஸ்மாக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 1:35 AM IST)
t-max-icont-min-icon

மூடப்பட்ட கடைகளில் பணி புரிந்தவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கக்கோரி திருவாரூரில் டாஸ்மாக் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த 3,400 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் இந்த கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் பணி இல்லாமல் மாற்று பணி வழங்கக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக்கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் அருள்மணி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தார். இதில் அரசு பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் அண்ணாதுரை, அரவிந்தன், முருகானந்தம், ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில தலைவர் தர்மராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோஷங்கள்

மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு கல்வி தகுதிகேற்ப மாற்று பணி வழங்க வேண்டும், மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க அரசு நிர்பந்திக்கக்கூடாது என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் வி.முருகானந்தம் நன்றி கூறினார்.

Next Story