பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 15 April 2017 1:44 AM IST (Updated: 15 April 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திருத்துறைப்பூண்டியில் முத்துப்பேட்டை சாலையில் உள்ள அவரது சிலை

திருத்துறைப்பூண்டி,

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி திருத்துறைப்பூண்டியில் முத்துப்பேட்டை சாலையில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆடலரசன் எம்.எல்.ஏ., நகரச்செயலாளர் ஆர்.எஸ்.பாண்டியன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் முகில் ராஜேந்திரன் பலர் கலந்து கொண்டனர். இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பழனிச்சாமி, உலகநாதன், ஒன்றிய செயலாளர் பாஸ்கர், நகர செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஐ.வி.நாகராஜன், ஒன்றியசெயலாளர் முருகானந்தம், நகரச்செயலாளர் கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர். விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் செல்வன், நாகை பாரளுமன்ற தொகுதி செயலாளர் இடிமுரசு, மாவட்ட துணைச்செயலாளர் முல்லைவளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
 

Next Story