டாஸ்மாக் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
துறையூரில் டாஸ்மாக் கடை அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்
துறையூர்
துறையூரில் இருந்து வேங்கடத்தானூர் செல்லும் சாலையில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து திரவுபதி அம்மன் கோவில் தெரு, சந்தைரோடு, நடராஜர் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் துறையூரில் இருந்து பெரம்பலூர் செல்லும் பஸ்களும் பெரம்பலூரில் இருந்து துறையூர் வரும் பஸ்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பஸ் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த துறையூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் செல்லப்பா, மணி, பாலு உள்பட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அப்போது டாஸ்மாக் கடையை மாற்ற உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றார்கள். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.