திருவள்ளூர், செங்கல்பட்டில் தீயணைப்புத்துறை சார்பில் வீர வணக்க நாள்


திருவள்ளூர், செங்கல்பட்டில் தீயணைப்புத்துறை சார்பில் வீர வணக்க நாள்
x
தினத்தந்தி 15 April 2017 3:45 AM IST (Updated: 15 April 2017 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர், செங்கல்பட்டில் தீயணைப்புத்துறை சார்பில் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

திருவள்ளூர்

திருவள்ளூர் தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை சார்பில் பணியின் போது உயிரிழந்த தீயணைப்புத்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வீரவணக்க நாள் திருவள்ளூர் தீயணைப்புதுறை அலுவலகத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சுப்பிரமணியன் தலைமை தாங்கி பணியின் போது உயிரிழந்த தீயணைப்புத்துறையினருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மலர்வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அவருடன் நிலைய அலுவலர்கள் வில்சன்ராஜ்குமார், செல்வராஜ், காளிமுத்து, பாஸ்கர், ஜெயச்சந்திரன், சந்திரமோகன், தனசேகரன் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த நிலைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் 20–ந் தேதி வரை தீத்தொண்டு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பொதுமக்களுக்கு தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்கள் வழங்கப்படும் என தீயணைப்பு நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு

காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு தீயணைப்பு துறை மற்றும் மீட்புத்துறையினர் சார்பில் செங்கல்பட்டு தீயணைப்பு நிலையத்தில் நேற்று வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கர் தலைமை தாங்கி தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் மலர் வளையம் வைத்து பணியின் போது இறந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தீயணைப்பு நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் வழியாக பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பேரணியாக சென்ற அவர்கள் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர்.


Next Story