திருட்டு சம்பவங்களில் கைதான 3 பெண்களை, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி


திருட்டு சம்பவங்களில் கைதான 3 பெண்களை, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி
x
தினத்தந்தி 15 April 2017 4:47 AM IST (Updated: 15 April 2017 4:47 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலட்சுமி, வசந்தா உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

கொள்ளேகால்,

கோவில் திருவிழாவில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கச்சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக குண்டலுபேட்டை பகுதியை சேர்ந்த வசந்தா, ஜோதி, ரத்னா ஆகிய 3 பெண்களை குண்டலுபேட்டை போலீசார் கடந்த மாதம் (மார்ச்) கைது செய்தனர். இந்த பெண்களுக்கு மலை மாதேஸ்வரா, பிளிகிரிரெங்கணபெட்டா ஆகிய கோவில்களில் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்பு உள்ளதாக கொள்ளேகால் புறநகர் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் அமர் நாராயணன் தலைமையிலான போலீசார், குண்டலுபேட்டைக்கு விரைந்தனர். மேலும் அங்கு வசந்தா உள்ளிட்ட 3 பெண்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது மலை மாதேஸ்வரா, பிளிகிரிரெங்கணபெட்டா பகுதியில் நடந்த திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு சம்பவங்களுக்கும் அந்த பெண்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், வசந்தா உள்ளிட்ட 3 பேரை கொள்ளேகால் அழைத்து வந்தனர். அவர்கள் 3 பேரையும் கொள்ளேகால் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி ஜெயலட்சுமி, வசந்தா உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். இதையடுத்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வசந்தா உள்பட 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story