சாத்தனூர் அணையில இருந்து திறந்து விடப்பட்ட ஒரே மாதத்தில் ஏரிகளில் தண்ணீர் வற்றியது பயிர் செய்த விவசாயிகள் கவலை


சாத்தனூர் அணையில இருந்து திறந்து விடப்பட்ட ஒரே மாதத்தில் ஏரிகளில் தண்ணீர் வற்றியது பயிர் செய்த விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 15 April 2017 6:34 PM IST)
t-max-icont-min-icon

சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒரே மாதத்தில் வற்றி போனதால் பயிர் செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

வாணாபுரம்,

சாத்தனூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12–ந் தேதி விவசாய பாசனம், நிலத்தடிநீர் மட்டம் உயர, ஏரி மற்றும் குளங்கள் நிரம்ப தண்ணீர் திறந்து விடப்பட்டது. இடது, வலது புறகால்வாய்கள் வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீரானது வாணாபுரம், குங்கிலயநத்தம், பேராயம்பட்டு, பழையனூர், தச்சம்பட்டு, ஆழிகொண்டாப்பட்டு, சோவூர் உள்பட 40 ஏரிகளுககு சென்றது. ஆனால் குறிப்பிட்ட ஏரிகளில் மட்டும் ஓரளவிற்கு தண்ணீர் சென்றது.

கால்வாய் தூர்வாராதது, ஆக்கிரமிப்பு போன்றவற்றால் சில ஏரிகளுககு தண்ணீர் செல்லவில்லை. இடதுபுற கால்வாய் அருகேயுள்ள வாணாபுரம், குங்கிலியநத்தம், நவம்பட்டு, சோவூர் உள்ளிட்ட பகுதி ஏரிகள் மட்டும் பாதியளவு தண்ணீர் நிரம்பியது. மேலும் சில ஏரிகளுக்கு குறைந்தளவு தண்ணீரே சென்றடைந்தது.

ஏரிகளில் தண்ணீர் வற்றியது

ஏரிகளில் தண்ணீர் வந்ததையடுத்தது அருகேயுள்ள விவசாய கிணறுகளில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்தது. ஏரி மற்றும் கிணற்றில் உள்ள தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்ய விவசாயிகள் தங்கள் நிலங்களை உழுது பயிரிட தொடங்கினார்கள்.

விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, மககாச்சோளம், எள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு ஒருமாதம் முடிவதற்குள் கடுமையான வெப்பத்தின் காரணமாக ஏரிகளில் உள்ள தண்ணீர் வேகமாக வற்றியது. ஏரிகளின் அருகேயுள்ள விவசாய கிணறுகளிலும் நிலத்தடிநீர் குறைந்தது.

விவசாயிகள் கவலை

இதுகுறித்து குங்கிலியந்தத்தில் பயிர் செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், ‘இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஏரியில் உள்ள தண்ணீரை நம்பிதான் விவசாயம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு தோறும் சாத்தனூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஏரியின் முழுக்கொள்ளளவை எட்டும். இதனால முபபோகம வவசாயம செயய முடியும. ஆனால் இந்தாண்டு பருவமழை பொய்த்து போனதால் சாத்தனூர் அணையில் தண்ணீர் குறைவாக காணப்பட்டது. அதனால் அணையில் இருந்து குறைநத அளவு மட்டும் ஏரிககு தண்ணீர் வந்தது.

இந்த தண்ணீரை பயன்படுத்தி ஒருபோகம் கூட முழுமையான மகசூல் எடுகக முடியாத நிலை காணப்படுகிறது. ஏரியில் வேகமாக தண்ணர் வற்றி வருவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளோம்’ என்றார்.


Next Story