பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு


பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்வு
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 15 April 2017 7:44 PM IST)
t-max-icont-min-icon

பிலிக்கல்பாளையம் ஏல சந்தையில் வெல்லம் விலை உயர்ந்துள்ளது.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா காவிரி கரையோர பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் விளையும் கரும்புகள் மூலம் 200–க்கும் மேற்பட்ட ஆலைகளில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டு சர்க்கரை தயாரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு தயாரிக்கப்படும் வெல்லங்கள் 30 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்லம் ஏல சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. இந்த சந்தையில் ஏலம் மூலம் வெல்லங்களை வியாபாரிகள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கிச் செல்கின்றனர்.

விலை உயர்வு

தற்போது இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் காய்ந்து போகும் நிலையில் உள்ளன. மேலும், வறட்சி காரணமாக கரும்பு பயிர் செய்வதும் வெகுவாக குறைந்து விட்டது.

இதனால் ஏல சந்தைக்கு வெல்லம் வரத்து குறைந்து விட்டது. தொடர்ந்து வரத்து குறைந்து கொண்டே வருவதால் வெல்லம் விலை உயர்ந்து உள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் உருண்டை வெல்லம் மூட்டை ஒன்று (30 கிலோ) ரூ.1,350–க்கும், அச்சு வெல்லம் ரூ.1,350–க்கும் ஏலம் போனது. இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் உருண்டை வெல்லம் மூட்டை ஒன்று ரூ.1,400–க்கும், அச்சு வெல்லம் ரூ.1,400–க்கும் விற்பனை செய்யப்பட்டது.


Next Story