களக்காடு அருகே காட்டு பன்றிகள் அட்டகாசம்


களக்காடு அருகே காட்டு பன்றிகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 16 April 2017 1:45 AM IST (Updated: 15 April 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

களக்காடு அருகே காட்டு பன்றிகள் அட்டகாசம்

களக்காடு,

களக்காடு அருகே உள்ள மேலப்பத்தையை சேர்ந்தவர் ஜார்ஜ் வில்சன் (வயது 40). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பத்மநேரியில், களக்காடு–சேரன்மகாதேவி சாலையோரம் அமைந்துள்ளது. அதில் அவர் ரசகதலி வாழைகளை பயிர் செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது தோட்டத்தில் கடமான்கள் புகுந்து அட்டகாசம் செய்தன. அதன் பின்னர் கடந்த 7–ந் தேதி இரவில் காட்டு பன்றிகள் புகுந்து சுமார் 50 வாழைகளை நாசம் செய்தன.

இந்தநிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவில் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக அவரது தோட்டத்திற்குள் புகுந்தது. அவைகள் 50 வாழைகளை சேதப்படுத்திவிட்டு சென்றன. காட்டு விலங்குகளின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்ட தனக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


Next Story