நெல்லை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா


நெல்லை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 16 April 2017 1:45 AM IST (Updated: 15 April 2017 11:16 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.டி.பி காமராஜ் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் ஜேசுதாஸ், நன்னகரம் தலைவர் சேகர், குற்றாலம் தலைவர் துரை, மேலகரம் தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் கே.எஸ்.குருசாமி, ஆறுமுகம், பாண்டி, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பாரதீய ஜனதா கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய பார்வையாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் அருணாசலம், மாவட்ட எஸ்.சி அணி பொது செயலாளர் மகேசுவரன், ஒன்றிய பொது செயலாளர் மணிகண்டன், தென்காசி நகர தலைவர் திருநாவுக்கரசு, குற்றாலம் தலைவர் செந்தூர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.மு.க–புதிய தமிழகம்


தி.மு.க சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் ஷெரீப், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, ரவிசங்கர், செல்லதுரை, தென்காசி நகர செயலாளர் சாதிர், விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் இசக்கி, நகர செயலாளர் முகம்மது ஹனீப் மற்றும் நிர்வாகிகள் எஸ்.பி.சுரேஷ், ராஜா, சிதம்பரம், துரை, சரவணன், கிருஷ்ணன், முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

களக்காடு


களக்காட்டில் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள் தலைமையில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜேந்திரன், நகர செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. ஆனந்தராஜ், லக்கிராஜா, முருகன், ராஜேந்திரன், சாகுல்அமீது, தியாகராஜன், இஸ்ரவேல், பாஸ்கர், மைதீன்பிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் மாவட்ட செயலாளர் கந்தசாமி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.


Next Story