திருச்செந்தூர் தொகுதியில் குளங்களை தூர்வாரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு


திருச்செந்தூர் தொகுதியில் குளங்களை தூர்வாரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 16 April 2017 3:00 AM IST (Updated: 15 April 2017 11:49 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் தொகுதியில் குளங்களை தூர்வாரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்த

தென்திருப்பேரை,

திருச்செந்தூர் தொகுதியில் குளங்களை தூர்வாரக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுப்பு

திருச்செந்தூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து குளங்களையும் தூர்வார வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதுடெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும் குரும்பூரில் நேற்று காலையில் விவசாயிகளுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.

அதன்படி அங்கு உண்ணாவிரதம் இருப்பதற்காக பந்தல் அமைக்கப்பட்டது. ஆனால் உண்ணாவிரத போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று காலை 9 மணி அளவில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம்

இதையடுத்து அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய ஏற்பாடு செய்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி புறநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கோகிலா (ஆழ்வார்திருநகரி), கிங்ஸ்லி தேவானந்த் (ஏரல்), வெங்கடேசன் (ஸ்ரீவைகுண்டம்) உள்பட ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.விடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தொடர்ந்து குரும்பூர் மெயின் ரோட்டில் சேதுக்குவாய்த்தான் விலக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கினர். இதையடுத்து உண்ணாவிரத பந்தலில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு சென்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டுகொள்ளவில்லை

இதில் உழவர் உழைப்பாளர் கட்சி செயலாளர் தமிழ்மணி, தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர்கள் ராமஜெயம் (தென்திருப்பேரை), பாலம் ராஜன் (குரும்பூர்), மந்திரமூர்த்தி (திருச்செந்தூர்), ஜான் பாஸ்கர் (உடன்குடி), மேல ஆத்தூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார், ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், திருச்செந்தூர் தொகுதியில் எந்தவொரு குளமும் தூர்வாரப்படாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. விவசாயம் பொய்த்து போனதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இதுகுறித்து ஆட்சியாளர்கள் கண்டுகொள்வது இல்லை. புதுடெல்லியில் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் தமிழக விவசாயிகளை மத்திய மாநில அரசுகள் கண்டு கொள்ளவில்லை என்றார்.


Next Story