தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? தீயணைப்புத்துறை வீரர்கள் செயல் விளக்கம்
தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து கோத்தகிரியில் நடந்த முகாமில் தீயணைப்புத்துறை வீரர்கள் செயல் விளக்கம் செய்து காட்டினர்.
கோத்தகிரி
தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப்பணித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தீ தடுப்பு தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் கோத்தகிரி தீயணைப்புத்துறை சார்பில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தீயணைப்பு துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதனை தொடர்ந்து ஜக்கனாலை கிராமத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தொடங்கி வைத்தார்.
மீட்பது எப்படி?முகாமில் தீ விபத்து மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்து தீயணைப்புத்துறை வீரர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி செயல்விளக்கம்அளித்தனர். அதன்பின்னர் கோத்தகிரி காமராஜர் சதுக்கம், மார்கெட் மற்றும் பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் தீ விபத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
கலந்து கொண்டவர்கள்முகாமில் தீயணைப்பு நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன், தீயணைப்பு வீரர்கள் சுந்தரேஷ், வித்யாபதி, ஹஜா மைதீன், முருகன், தட்சிணாமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமை தொடர்ந்து 20–ம் தேதி வரை கோத்தகிரி சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு தீ தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்ப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.