வேட்புமனுக்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு 3 மாதங்கள் காலஅவகாசம் வழங்கக்கோரி வழக்கு


வேட்புமனுக்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு 3 மாதங்கள் காலஅவகாசம் வழங்கக்கோரி வழக்கு
x
தினத்தந்தி 16 April 2017 2:00 AM IST (Updated: 16 April 2017 1:06 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஐகோர்ட்டில், வேட்புமனுக்களை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு 3 மாதங்கள் காலஅவகாசம் வழங்கக்கோரி வழக்கு.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘பொதுத் தேர்தல்களின்போது குற்ற வழக்குகளில் தொடர்புடைய வேட்பாளர்கள், அதுகுறித்த விவரங்களை வேட்புமனுவில் தெரிவிக்க வேண்டும். ஆனால், உண்மை தகவல்களை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்யும்போது, அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர். வேட்புமனுவை பரிசீலிக்க போதிய கால அவகாசம் இல்லாததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு குறைந்தது 3 மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும். இதுகுறித்து இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனருக்கு கடந்த பிப்ரவரி 7–ந் தேதி கோரிக்கை மனுவை அனுப்பி வைத்தும், இதுவரை பரிசீலிக்காமல் உள்ளார். எனவே, என் மனுவை பரிசீலிக்க உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் இளைய பெருமாள் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனுவுக்கு பதில் அளிக்கும்படி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 18–ந் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

Next Story