காசிமேட்டில் கத்திமுனையில் பெண்ணை கட்டிப்போட்டு நகை–பணம் கொள்ளை
காசிமேட்டில், வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்திமுனையில் கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ராயபுரம்,
சென்னை காசிமேடு ஷேக்மேஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் லில்லிபுஷ்பம் (வயது 60). இவருடைய மகன், சிங்கப்பூரில் வசித்து வருகிறார். லில்லிபுஷ்பம், தன்னுடைய மருமகள் செரினாவுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.
புனித வெள்ளியையொட்டி நேற்று முன்தினம் செரினா, அங்குள்ள தேவாலயத்துக்கு சென்று விட்டார். வீட்டில் லில்லிபுஷ்பம் மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு, அவர் கதவை திறந்தார்.
முகமூடி கொள்ளையர்கள்
வீட்டின் வெளியே முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள், கையில் கத்தியுடன் நிற்பதை கண்டு அதிர்ச்சியில் கூச்சலிட்டார். உடனே கொள்ளையர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ‘‘கூச்சல் போட்டால் குத்திக்கொன்று விடுவோம்’’ என்று கூறி அவரை கத்திமுனையில் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
பின்னர் சேலையால் லில்லிபுஷ்பத்தின் கை, கால்களை கட்டிப்போட்ட கொள்ளையர் கள், தாங்கள் கொண்டு வந்த போலி சாவி மூலம் வீட்டில் இருந்த பீரோவை திறந்தனர். அதில் இருந்த 14 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
தனிப்படை அமைப்பு
தேவாலயம் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி வந்த செரினா, தனது மாமியார் லில்லி புஷ்பத்தின் கை, கால்கள் கட்டப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாமியாரின் கை, கால்களில் கட்டி இருந்த கட்டுகளை அவிழ்த்து அவரை மீட்டார்.
இது குறித்த புகாரின்பேரில் காசிமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவாகி இருந்த முகமூடி கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story