பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு பொது நிவாரணத்தொகை


பட்டாசு விபத்துகளில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு பொது நிவாரணத்தொகை
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 1:23 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரணத்தொகை

விருதுநகர்,

சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு பட்டாசு விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.24 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலைகளை 31 பேருக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது:-

பட்டாசு விபத்துகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப சூழ்நிலை கருதி அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது. மேலும் தமிழக முதல்-அமைச்சருக்கு அறிக்கை அனுப்பப்பட்டு முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து உதவித்தொகை பெற்றும் வழங்கப்படுகிறது.

வெம்பக்கோட்டை அருகிலுள்ள செவல்பட்டி, கங்கரக்கோட்டை, வெற்றிலையூரணியில் தனியார் பட்டாசு ஆலை விபத்திலும், திருத்தங்கல்லில் வீட்டில் நடைபெற்ற வெடி விபத்திலும் என மேற்படி விபத்துகளில் மரணமடைந்த 21 பேருக்கு தலா ரூ.1 லட்சமும், பலத்த காயமடைந்த 3 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதமும், சிறு காயமடைந்த 7 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் என 31 பேரின் குடும்பங்களுக்கு ரூ.24 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் முதல்-அமைச்சர் பொது நிவாரணத்தொகை, முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க தற்போது வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

தொழிலாளர்களும், தொழிற்சாலை உரிமையாளர்களும் அரசு குறிப்பிடும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி எதிர்வரும் காலங்களில் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தியினை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் விருது நகர் எம்.பி. ராதாகிருஷ்ணன், சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், சிவகாசி சப்-கலெக்டர் அமர்குஷ்வாஹா, தனி தாசில்தார் சங்கரபாண்டியன், சிவகாசி தாசில்தார் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story