திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்; 2 பேர் கைது
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள புதுச்சத்திரம் பகுதியில் உள்ள கூவம் ஆற்றில் சிலர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வெள்ளவேடு போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சப்–இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் வெள்ளவேடு மற்றும் புதுச்சத்திரம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு மினி டெம்போ மற்றும் லாரியில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அந்த வாகனங்களை கைப்பற்றி அதை ஓட்டி வந்த வேப்பம்பட்டை சேர்ந்த ஜெகதீசன் (வயது 32), கொட்டாமேடை சேர்ந்த சுரேஷ்பாபு (42) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதே போல புல்லரம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் புன்னப்பாக்கம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்தவர் மாட்டுவண்டியை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் அந்த மாட்டு வண்டியை கைப்பற்றி தப்பி ஓடியவர் யார்? என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story