பெரியபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பலி
பெரியபாளையம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் சட்டக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் அத்திவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகர் (வயது 19). சட்டக்கல்லூரியில் பி.எல்.2–ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் பகிரத்சவுத்ரி(20). இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் பெரியபாளையத்தில் இருந்து ஆரணி நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்றனர். பெரியபாளையம்–புதுவாயல் நெடுஞ்சாலையில் ஆரணி சமுதாயக்கூடம் அருகே வந்தபோது நாய் ஒன்று திடீர் என்று சாலையின் குறுக்கே வந்ததாக தெரிகிறது.
இதனால் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்த குணசேகர் திடீர் என்று பிரேக் பிடித்தார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார்சைக்கிள் சாலை ஓரம் இருந்த சிமெண்டு கம்பத்தில் மோதியது.
சாவு
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த குணசேகர், பகிரத்சவுத்ரி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த ஆரணி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் குமார், சீனிவாசன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி குணசேகர் பரிதாபமாக இறந்து போனார். பகிரத்சவுத்ரி மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து ஆரணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story