மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை


மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
x
தினத்தந்தி 16 April 2017 3:00 AM IST (Updated: 16 April 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

மீன் பிடி தடைகாலம் தொடங்கியதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை.

பொன்னேரி,

பொன்னேரியை அடுத்த பழவேற்காடு மீனவ பகுதியில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15–ந்தேதி முதல் மே மாதம் 30–ந்தேதி வரை மீன் இனப்பெருக்கத்திற்காக மீன் பிடி தடைகாலத்தை அறிவித்துள்ளது. மீன்பிடி தடைகாலம் தொடங்கி உள்ளதால் பழவேற்காடு பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இந்த கால கட்டத்திற்கு மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரண உதவி அளித்து வருகிறது.

 இந்த 45 நாட்களில் மீனவர்கள் தங்களின் படகுகள், கட்டுமரங்கள், மீன்பிடி வலைகள் போன்றவற்றை சீரமைத்து கொள்வார்கள் தடைகாலம் முடிந்த பின்னர் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபடுவர்கள்.

வாழ்வாதாரத்தை
உயர்த்த வேண்டும்

 ஏற்கனவே இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் வார்தா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலும் ஏரியும் இணையும் முகத்துவாரப்பகுதி மணல் மேடாகி உள்ளதால் இந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க படகில் அதிக தொலைவு சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு அந்த பகுதி மீனவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தமிழக அரசு  நிவாரண உதவிகளை அதிகமாக வழங்கி அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

 மேலும் மீன் பிடி தடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் மீன்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

Next Story