பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,


திருவாரூரில் 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையமான வா.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் வள்ளிவேலு கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். விடைத்தாள் திருத்தத்தின் போது தினப்படியாக உள்ளூர் ஆசிரியர்களுக்கு ரூ.100-ம், வெளியூர் ஆசிரியர்களுக்கு ரூ.200 வழங்குவதாகவும், விடைத்தாள் ஒன்று திருத்த ரூ.10 உயர்த்தி தருவதாகவும் அரசு அறிவித்தது. ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை போன்றவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

Next Story