மணல்மேடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது


மணல்மேடு அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 April 2017 3:45 AM IST (Updated: 16 April 2017 2:17 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்து, அவருடைய தந்தையை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மணல்மேடு,


மணல்மேடு அருகே அழகன்தோப்பு மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாலு. இவருடைய மகன் மகேஷ் (வயது 34). தொழிலாளி. சம்பவத்தன்று இவரின் தாய் ராணியுடன் (55). அதே பகுதியை சேர்ந்த செல்வக்குமார் என்பவருக்கு சொந்தமான வயல் பகுதியில் புல் அறுக்க சென்றார். அப்போது அங்கு வந்த செல்வக்குமார் (35) மற்றும் அவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து எங்கள் வயல் பகுதியில் எப்படி புல் அறுக்கலாம் என்று கூறி தகராறு செய்து தாய் மற்றும் மகனை தாக்கினர். மேலும் செல்வக்குமார், மகேஷிடம் இருந்து புல் அறுக்கும் அரிவாளை பிடிங்கி அவரை வெட்டினார். இதில் காயம் அடைந்த மகேஷ், ராணி ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மணல்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வக்குமாரை கைது செய்தனர். அவருடைய தந்தை கிருஷ்ணமூர்த்தியை வலைவீசி தேடி வருகிறார்கள். 

Next Story