டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்


டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 16 April 2017 4:30 AM IST (Updated: 16 April 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

மணமேல்குடி அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மணமேல்குடி,

தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில சாலை ஓரங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலைகளில் இருந்த 3 கடைகள் அகற்றப்பட்டன. இந்த நிலையில் மணமேல்குடி அருகே உள்ள தண்டலை சாலையில் இருந்த டாஸ்மாக் கடை வழக்கம்போல திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது. இந்த சாலை மணலூர், மாந்தங்குடி, வெள்ளூர், கீரனூர் பெருமருதூர், ஆவுடையார்கோவில் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் சாலையாக உள்ளது. மேலும் இதில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பள்ளி மாணவ- மாணவிகளும் செல்லும் சாலையாக உள்ளது.

முற்றுகை

எனவே இந்த டாஸ்மாக் கடை இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் என கூறி, அந்த பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், பெண்களும் ஒன்றுகூடி கடையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர்.

இதில் 15 நாட்களுக்குள் கடையை அகற்றப்படும் என உறுதி அளித்தனர். இதை யடுத்து அந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகையில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story