அரியலூர் மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை


அரியலூர் மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 16 April 2017 4:15 AM IST (Updated: 16 April 2017 2:18 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாளையொட்டி பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் அம்பேத்கர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரியலூர்,

சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று முன்தினம் தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் தலைமையில் அக்கட்சியினர் பெரம்பலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மகேந்திரன், நல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மண்டல அமைப்பாளர் கிட்டு மற்றும் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க.

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமையில் கட்சி அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் துரைராஜ் தலைமையிலும், காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் தலைமையிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாளையம் சின்னசாமி தலைமையிலும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநில செயலாளர் வழக்கறிஞர் காமராசு தலைமையிலும் பெரம்பலூரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது.

பெரம்பலூர் மாவட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் மற்றும் அதன் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் கம்யூனிஸ்டு கட்சிகள், தமிழ்நாடு அரசு எஸ்.சி., எஸ்.டி. அலுவலர் நல சங்கம், லோக்ஜனசக்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அண்ணல் அம்பேத்கர் முன்னணி மற்றும் அம்பேத்கர் இயக்கங்களை சேர்ந்த தொண்டர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெயங்கொண்டம்

இதேபோல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஒன்றிய அலுவலகத்தின் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொகுதி செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ம.க. சார்பில் நகர செயலாளர் ரெங்கநாதன் தலைமையில் நிர்வாகிகள் மைனர் பாண்டியன், தில்லைராஜன், கொளஞ்சி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஜெயங்கொண்டத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையில் நிர்வாகிகள் துரைராஜ், மகாராசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருமானூர்

திருமானூரில் பஸ் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு பங்குதந்தை பெல்லர்மின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் விஜி, ஒன்றிய விவசாய அணி துணை அமைப்பாளர் ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக அனைத்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அம்பேத்கர் வழியன் தொண்டர்களுடன் வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பாரதீய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கர் தலைமையில் கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன் மாலை அணிவித்தார். இதில் மாநில விவசாய அணி செல்லக்கண்ணு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் ஒன்றிய பொறுப்பாளர் தங்க ஜெயபாலன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு கமிட்டி சார்பில் பாலு தலைமையிலும், மணல்குவாரி லோடுமேன் சங்கம் சார்பிலும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில உழவர் பேரியக்க செயலாளர் ரவிசங்கர் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் தொகுதி செயலாளர் தர்ம.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Next Story