ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 4-வது நாளாக போராட்டம்
ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நெடுவாசலில் 4-வது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.
வடகாடு,
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எனப்படும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி வழங்கியது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிப்புக்குள்ளாகி, வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும், இதனால் இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை மற்றும் வடகாட்டில் தொடர் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், பெண்கள், மாணவ- மாணவிகள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். பின்னர் மத்திய, மாநில மந்திரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தம் பெற்ற தனியார் நிறுவனங்களுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கையெழுத்திட்டு ஒப்புதல் வழங்கினார். இதனால் நெடுவாசல் போராட்ட குழுவினரும், பொதுமக்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
4-வது நாளாக போராட்டம்
ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து நெடுவாசல் நாடியம்மன் கோவிலில் அப்பகுதி விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் கடந்த 12-ந் தேதி முதல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றும் 4-வது நாளாக அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் நெடுவாசல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Next Story