அரசு பஸ்-வேன் மோதலில் நாடக கலைஞர்கள் உள்பட 19 பேர் காயம்
அறந்தாங்கியில் அரசு பஸ்-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நாடக கலைஞர்கள் உள்பட 19 பேர் காயம் அடைந்தனர்.
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடியில் தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாடக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு, நாடக கலைஞர்கள் 8 பேர் நேற்று ஒரு வேனில் புதுக்கோட்டைக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி நோக்கி ஒரு அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.
அறந்தாங்கியில் உள்ள சுங்கச்சாவடி பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, அரசு பஸ்சும், வேனும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
19 பேர் காயம்
இதில் வேனில் வந்த நாடக கலைஞர்களான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 53), மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த போஸ் (60), வேன் டிரைவர் கருப்பையா (40), நரிமேடு பகுதியை சேர்ந்த மங்கள தேவி (40), புதுக்கோட்டை காந்திநகர் நெல்சன் (50), புதுக்கோட்டை பாலன்நகர் கணேசன் (34), அறந்தாங்கி சிங்காரம் (41), இறையூர் கிராமத்தை சேர்ந்த கிட்டப்பா (52) மற்றும் பஸ்சில் வந்த நாகரெத்தின பள்ளம் கிராமத்தை சேர்ந்த வேலுச்சாமி (49), ஓணா சிறுவயல் ராஜ்குமார் (48), மேலூர் மில் கேட்டை சேர்ந்த அறிவழகன் (33), எரிச்சி கிராமத்தை சேர்ந்த லெட்சுமி (40), அமுதா (40), அழியாநிலை பொன்னழகு (33), கரிமேனிஓடை கிராமத்தை சேர்ந்த சரசு (47), கலையரசன் (20), அறையப்பட்டி கிராமத்தை சேர்ந்த வசந்தா (34), மீன்ராஜ் (40), மற்றொரு லெட்சுமி (30) ஆகிய 19 பேர் காயம் அடைந்தனர்.
போலீசார் விசாரணை
இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அறந்தாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித் தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்த 19 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அனைவரும் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story