கன்னியாகுமரி மாதவபுரம் நாராயணசாமி கோவிலில் சித்திரைத் திருவிழா


கன்னியாகுமரி மாதவபுரம் நாராயணசாமி கோவிலில் சித்திரைத் திருவிழா
x
தினத்தந்தி 16 April 2017 4:00 AM IST (Updated: 16 April 2017 2:19 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி மாதவபுரம் நாராயணசாமி கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாதவபுரத்தில் ஸ்ரீமன் நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 25-ந் தேதி வரை நடக்கிறது. 1-ம் திருவிழாவான காலை 6 மணிக்கு அய்யாவுக்கு திருவிளக்கு நியமித்தலும், அதைத் தொடர்ந்து முட்டப்பதி பாற்கடலில் பதமிட்டு மேளதாளத்துடன் பதம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், காலை 9.30 மணிக்கு கொடியேற்றமும் நடந்தது. மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், அய்யா இந்திர வாகனத்தில் பதியை வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு நடந்த சிறுவர்-சிறுமியர்களின் கலைநிகழ்ச்சிகளை மாதவபுரம் ஊர் தலைவர் முத்துசாமி தொடங்கி வைத்தார். விழா நாட்களில் 20-ந் தேதி வரை தினமும் காலை 6 மணிக்கு அய்யாவுக்கு திருவிளக்கு நியமித்தலும், பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், மாலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை மற்றும் அய்யா இந்திர வாகனத்தில் பதியை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

8-ம் திருவிழாவன்று கலிவேட்டையும், 12-ம் திருவிழாவன்று காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பால் வைத்து பணிவிடையும், அய்யா பதியை வலம் வருதலும், 7 மணிக்கு திருக்கொடியிறக்கம் நிகழ்ச்சியும், தர்மம் நிறைவேற்றுதலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மாதவபுரம் ஊர் தலைவர் முத்துசாமி, செயல் தலைவர் ஸ்ரீராமச்சந்திரன், உப தலைவர்கள் தங்கமணி, பால்மணி, செயலாளர் கிருஷ்ணசாமி, துணை செயலாளர் முத்துக்குமார், பொருளாளர் நாராயணபெருமாள் மற்றும் டிரஸ்டிகள் பெரியசாமி, சிதம்பரம், பாலகிருஷ்ணன், பாலசந்திரன், ஜெயகுமார், சுயம்புலிங்கம், அய்யப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள். 

Next Story