கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு 6 மாதம் படகு போக்குவரத்து ரத்து
கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு 6 மாதம் படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நாளை தொடங்குகிறது.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் கடந்த 2000-ம் ஆண்டு கடல் நடுவில் உள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இதன் பராமரிப்பு பணிகளை செய்து வருகிறது. இந்த சிலையை காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவது வழக்கம். இந்த சிலையை அருகில் சென்று பார்க்க பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகு விடப்பட்டு உள்ளது.
திருவள்ளுவர் சிலை கடலின் நடுவில் உள்ளதால் உப்பு காற்றால் சேதமடையும். எனவே இச்சிலைக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசுவது வழக் கம். அதன்படி தற்போது ரசாயன கலவை பூச சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தை அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த ஒருவர் எடுத்துள்ளார்.
6 மாதம் ரத்து
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதலில் சிலையின் முன்பு 140 அடி உயரத்தில் சாரம் அமைக்கும் பணி நடக்கிறது. இதற்கு 80 டன் அளவுக்கு இரும்பு கம்பிகள் தேவைப்படும். இந்த பணிகளை சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் ஜேக்சன் வில்லியம், உதவி செயற்பொறியாளர் பால் ஜெப ஞானதாஸ், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழக மேலாளர் வின்ஸ்லி ராய் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைய 6 மாதம் ஆகும். எனவே 6 மாத காலத்திற்கு திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது.

Next Story